;
Athirady Tamil News

பிரித்தானியாவில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு: மருத்துவமனைக்கு எச்சரிக்கை விடுப்பு

0

இங்கிலாந்தில் பெண்ணொருவர் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்த பின்னர் உயிரிழந்த சம்பவம் குறித்து, மருத்துவமனைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை
கடந்த 2023ஆம் ஆண்டு, சூசன் எவன்ஸ் என்ற 55 வயது பெண் போர்ட்ஸ்மவுத்தில் உள்ள குயின் அலெக்சாண்ட்ரா மருத்துவமனையில் இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

உடல் எடையை குறைக்க அவர் இதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அவர் நன்றாக குணமடைந்தார்.

ஆனால், ஜூனியர் மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தின் முதல் நாளான சூலை 13ஆம் திகதி அதிகாலையில் சூசன் வயிற்று வலியை அனுபவிக்கத் தொடங்கினார்.

உடல்நிலை மோசமடைந்து இறப்பு
பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் 15ஆம் திகதி மீண்டும் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

10 நாட்களுக்கு பின் மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட சூசன் எவன்ஸ், உடல்நிலை மோசமடைந்து அடுத்த மாதத்தில் இறந்தார்.

இந்த நிலையில், உடல் எடையை குறைக்கும் சிறப்பு செவிலியர் யாரும் பணியில் இல்லை என்பதையும், சூசனை மூத்த மருத்துவர் பார்க்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, Coroner நீதிமன்றம் இதனை விசாரணைக்கு எடுத்து மருத்துவமனைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் விசாரணை அதிகாரியும் மருத்துவமனையை விமர்சித்துள்ளார்.

பதிலளிக்க அவகாசம்
உதவி பிரேத பரிசோதனை அதிகாரியான Sally Olsen கூறுகையில், “அநேகமாக, 13 சூலை 2023 அன்று பேரியாட்ரிக் குழுவின் உறுப்பினரால் அவர் பார்க்கப்பட்டிருந்தால், அவர் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருப்பார். மேலும் விரைவில் அறுவை சிகிச்சை செய்திருப்பார்.

அடையாளம் காணப்பட்ட தோல்விகள் அவரது மரணத்திற்கு மிகக் குறைவாகவே பங்களித்தன. கொள்கையைப் பின்பற்றத் தவறியது சூசன் எவன்ஸின் மரணத்திற்கு மிகக் குறைவான பங்களிப்பை அளித்தது. எனவே இது கவலைக்குரிய விடயம்” என தெரிவித்துள்ளார்.

போர்ட்ஸ்மவுத் மருத்துவமனைகள் பல்கலைக்கழக NHS அறக்கட்டளை அறிக்கைக்கு பதிலளிக்க பிப்ரவரி 7 வரை அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.