12 பேரை வெவ்வேறு இடங்களில் சுட்டுகொன்றுவிட்டு..தனது உயிரை மாய்த்துக்கொண்ட நபர்..அதிர வைத்த சம்பவம்

மான்டிநீக்ரோவில் நபர் ஒருவர் 12 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு
தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்று மான்டிநீக்ரோ (Montenegro). இங்குள்ள Cetinje நகரில் அமைந்துள்ள மதுபான விடுதியில் நேற்று மாலை துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியது.
உள்ளே நுழைந்த அகோ மார்டினோவிக் என்ற 45 வயதான நபர், தான் கொண்டு வந்த துப்பாக்கியை வைத்து சரமாரியாக சுட்டுள்ளார்.
இதில் மதுபான விடுதியின் உரிமையாளர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர் மார்டினோவிக் மேலும் 3 இடங்களுக்கு சென்று அங்கிருந்தவர்களையும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் மொத்தம் 12 பரிதாபமாக உயிரிழந்தனர்.
தலையில் துப்பாக்கியால் சுட்டு
இதனையடுத்து தப்பிச்சென்ற மார்டினோவிக்கை பொலிஸார் சுற்றி வளைத்தனர். அப்போது அவர் தனது தலையில் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
பின்னர் நடந்த விசாரணையில், ஏற்கனவே மார்டினோவிக் மீது சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தது உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரிய வந்தது.