அமெரிக்காவின் நியூயார்க் நகரில் துப்பாக்கி சூடு: 10 பேர் வரை படுகாயம்
அமெரிக்காவின் நியூயார்க் நகர இரவு விடுதியின் வெளியே நடந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவில் புதன்கிழமை இரவு ஜமைக்கா(Jamaica), குயின்ஸில்(Queens) உள்ள அமசுரா(Amazura) இரவு விடுதியின் வெளியே நடந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில் பத்து பேர் காயமடைந்தனர்.
நியூயார்க் நகர காவல்துறை கூறுகையில், சுமார் 11:20 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாட்சிகள் தெரிவித்த தகவலின் படி, சந்தேக நபர்கள் தப்பி செல்வதற்கு முன்பு சுமார் 30 துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
துப்பாக்கி சூடு நடத்திய பின்னர் வெளி மாநில பதிவு எண்களை கொண்ட செடான் கார் ஒன்றில் ஏறியதை கண்டனர்.
அவசர மருத்துவ பணியாளர்கள் விரைவாக காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளான லாங் தீவு யூத மருத்துவமனை மற்றும் கோஹன் குழந்தைகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இசை மற்றும் பிற நிகழ்ச்சிகளை நடத்தி வருவதுடன் புகழ்பெற்ற இடமாகவும் அறியப்பட்ட அமாசுரா இரவு விடுதி, ஒரே நேரத்தில் 4,000 பேர் வரை இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் சமீபத்தில் நியூ ஆர்லியன்ஸில் நடந்த துயரமான திடீர் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ளது.