2025 ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல்… சுவிஸ் ரயில்வேயில் செய்யப்பட்டுள்ள மாற்றம்
இன்றைய காலகட்டத்தில் கார்பன் டை ஆக்சைடு வெளியீடு என்னும் விடயம் உலகம் மூழ்வதும் பெரிதும் பேசப்படும் விடயமாக உள்ளது.
பூமியில் பல பெரும் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்துள்ள புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் இந்த கார்பன் டை ஆக்டைடுதான்.
குறிப்பாக, வாகனங்கள் வெளியிடும் புகையில் இந்த கார்பன் டை ஆக்சைடு உள்ளதால், பல நாடுகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறிவருகின்றன.
2025 ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல்…
இந்நிலையில், 2025 ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் சுவிஸ் பெடரல் ரயில்வே இயக்கும் ரயில்கள் அனைத்தும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறியுள்ளன.
அதாவது, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தைக் கொண்டுதான் அனைத்து ரயில்களும் இயங்கத் துவங்கியுள்ளதாக பெடரல் ரயில்வே தெரிவித்துள்ளது.
இதற்குமுன், ரயில்கள் இயக்கத்துக்கான மின்சாரத்தில் 90 சதவிகிதம் நீர்மின் நிலையங்களிலிருந்தும், 10 சதவிகிதம் அணுமின் நிலையங்களிலிருந்தும் பெறப்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.