H1B விசாவினால் கலக்கத்தில் இந்தியர்கள்! சூடுபிடிக்கும் விவகாரம்
அமெரிக்காவில் H1B விசா தொடர்பில் ட்ரம்பின் நிலைப்பாடு இந்தியர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
விசா விவகாரம்
அமெரிக்கர் அல்லாதவர்களுக்கு வழங்கப்படும் H1B விசா விவகாரம் தற்போது பரபரப்பாகியுள்ளது.
ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பதவியேற்க உள்ள நிலையில், வெள்ளை மாளிகையின் AI ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.
இந்தியரான அவரது இந்த நியமனம் குடியேற்றம் தொடர்பாக மீண்டும் விவாதங்களை கிளப்பியது.
அதாவது, வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கு IT உள்ளிட்ட துறைகளில் பணியில் சேர H1B விசா வழங்குபட்டு வரும் நிலையில், அமெரிக்க வலதுசாரிகள் இதனை நிறுத்த குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்தியர்களுக்கு கலக்கம்
இதனால் பெரும்பாலான இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கூற்று நிலவுகிறது. ஏனெனில், அமெரிக்காவில் இந்த விசா வைத்திருப்பவர்களில் 10யில் 7 பேர் இந்தியர்கள் ஆவர்.
அதேபோல் H1B விசாவைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கு வழங்கப்படும் Optional Practical Training என்ற பணி ரீதியான பயிற்சிக்கும் தற்போது எதிர்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.
தற்போது நடந்து வரும் விவாதங்களால் அமெரிக்காவில் உள்ள இந்தியர்களும், அங்கு செல்ல காத்திருக்கும் இந்தியர்களும் கலக்கமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.