ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய வெளிநாட்டவர் கைது
புத்தாண்டு பிறப்பதற்கு சிறிது நேரத்திற்குமுன், மேற்கு பெர்லினில் வெளிநாட்டவர் ஒருவர் திடீரென கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
கத்திக்குத்து தாக்குதல் நடத்திய வெளிநாட்டவர்
டிசம்பர் மாதம் 31ஆம் திகதி இரவு 11.50 மணியளவில், Charlottenburg என்னுமிடத்தில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியிலிருந்து கத்தி ஒன்றைத் திருடிய ஒரு நபர், வெளியே வந்து திடீரென கண்மூடித்தனமாக அந்த வழியாகச் செல்வோரை கத்தியால் தாக்கத் துவங்கியுள்ளார்.
ஆனால், அந்த பகுதியில் நின்றவர்கள் அவர் மீது பாய்ந்து அவரை மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Kurz vor 12 Uhr wurden Einsatzkräfte in die Sömmeringstr. in #Charlottenburg alarmiert, da ein Mann mehrere Personen – vermutlich mit einem Messer – verletzt haben soll. Zwei Verletzte wurden in Krankenhäuser eingeliefert.
Der Täter wurde festgenommen und für weitere Maßnahmen… pic.twitter.com/NeiZLH3FOa— Polizei Berlin (@polizeiberlin) December 31, 2024
தாக்குதல் நடத்திய நபர் சிரியா நாட்டவர் என்றும், அவர் ஸ்வீடன் நாட்டில் வாழ்ந்துவந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும், ஒருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இதுபோன்ற நேரங்களில் ஜேர்மன் மக்கள் ஒற்றுமையாக செயல்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.