உலக செஸ் சாம்பியன் குகேஷ் உட்பட 3 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!
தியான் சந்த் கேல் ரத்னா விருது பெற்ற நான்கு விளையாட்டு வீரர்களில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மானு பாக்கர் மற்றும் செஸ் உலக சாம்பியனான குகேஷ் ஆகியோருக்கு இந்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.
கேல் ரத்னா விருது
2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச அளவில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கான கேல் ரத்னா விருது (Khel Ratna Award) அறிவித்துள்ளது.
அதன்படி, 2025 ஜனவரி 17 ஆம் திகதி கேல் ரத்னா விருது குடியரசுத்தலைவர் கையால் வழங்கப்படும்.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு
தலைமையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மத்திய அரசுத்துறை செயலர்கள், முக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் அனைத்து விருதும் வழங்கப்படும்.
அதன்படி, உலக செஸ் சாம்பியன் குகேஷ் (Gukesh D), ஹாக்கி பிரிவில் ஹர்மான்பிரீத் சிங் (Harmanpreet Singh), பாரா தடகள பிரிவில் பிரவீன் குமார் (Praveen Kumar), துப்பாக்கிசூடுதல் பிரிவில் மனு பர்க்கர் (Manu Bhaker) ஆகியோருக்கு கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது.