;
Athirady Tamil News

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு.., தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

0

தமிழக அரசு ஊழியர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வெளியான செய்தி குறிப்பில் கூறியதாவது..,
அரசு ஊழியர்களுக்கு, ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் போனஸிற்காக ரூ. 163 கோடியே 81 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ. 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு போனஸ் ஊதியம் வழங்கப்படுகிறது.

தொகுப்பூதியம், சிறப்புக் கால ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2023 – 2024ஆம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூ. 1000 சிறப்பு போனஸ் வழங்கப்படும்.

சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூ. 500 பொங்கல் பரிசு வழங்கப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.