;
Athirady Tamil News

2025-ம் ஆண்டில் மூன்றாம் உலகப்போர் எச்சரிக்கை.., ஹிப்னோதெரபிஸ்ட் கணிப்பு

0

2025-ம் ஆண்டில் ஆண்டில் 3-ம் உலகப்போர் நிச்சயமாக வரும் என லண்டனை சேர்ந்த ஹிப்னோதெரபிஸ்ட் நிக்கோலஸ் அஜூலா என்பவர் கணித்துள்ளார்.

மூன்றாம் உலகப்போர்?
புத்தாண்டு தொடங்கிய நிலையில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். ஆனால், இந்த ஆண்டில் பூமியில் அழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக பாபா வாங்கா கணித்தது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்நிலையில், லண்டனை சேர்ந்த ஹிப்னோதெரபிஸ்ட் நிக்கோலஸ் அஜூலா என்பவர் 2025-ம் ஆண்டில் ஆண்டில் 3-ம் உலகப்போர் நிச்சயமாக வரும் என கணித்துள்ளார்.

இவர், கடந்த 2018-ம் ஆண்டில் பெருந்தொற்று ஏற்பட்டு லட்சக்கணக்கில் மக்கள் இறக்க நேரிடும் என்று கணித்திருந்தார். அதன்படியே, 2019-ம் ஆண்டின் இறுதியில் கொரோனா பெருந்தொற்று வந்து பேரழிவை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நிக்கோலஸ் அஜூலா கணிப்புகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவரது கணிப்பில், 2025-ம் ஆண்டில் மதம் மற்றும் தேசியத்தின் பெயரால் ஒருவருக்கொருவர் மனித தீமை மற்றும் வன்முறையின் கொடூரமான செயல்களைக் காண்போம்.

அரசியல் படுகொலைகள் நடக்கும், தீமையும், வன்முறையும் இந்த பூமியை கைப்பற்றும். அதிக மழை பொழிந்து வெள்ளம் ஏற்படும். இதனால், லட்சக்கணக்கான வீடுகள் சேதமாகும். கடல்மட்டம் உயரும்.

பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி இடையே சமரசம் ஏற்படும். மேலும் பணவீக்கம் ஏற்படும் என்று கணித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.