;
Athirady Tamil News

வருடப்பிறப்பில் நண்பர்களினால் மக்கள் மனதை நெகிழவைத்த சம்பவம்:

0

வவுனியாவில் விபத்தில் உயிர்நீத்த இளைஞனுக்கு அஞ்சலி செலுத்திய நண்பர்கள்

வவுனியாவில் விபத்தில் உயிர்நீத்த பிரிவின் பின்னரும் இன்னும் உன் நண்பர்களின் கண்களில் இருந்து கொண்டு தான் இருகிறாய் வடிந்தோடும் கண்ணீராயல்ல அவர்களின் கண்களை கலங்கவைக்கும் கண்மணியாய் என்ற கவிதையுடன் இவ் நண்பர்களின் உணர்வு அவரின் பிரிவினை உணர்த்தி நின்றமை வீதியில் சென்றவர்களின் மனதை நெகிழவைக்கும் நிகழ்வாக அமைந்திருந்தது

வவுனியா ஏ9 வீதி தாண்டிக்குளத்தில் கடந்த 01.01.2022 அன்று பிக்கப் ரக வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதியதில் வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த செல்வராசா றஜீபன் (வயது 37) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

அவரின் மூன்றாவது வருட நினைவு தினத்தினையடுத்து அவரின் நண்பர்கள் விபத்து இடம்பெற்ற தாண்டிக்குளம் பகுதியில் அன்னாரின் உருவப்படத்திற்கு வைத்து மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தியமையுடன் 50நபர்களுக்கு மதிய நேர உணவு பார்சலும் வழங்கி னவத்திருந்தனர்

இவ் நினைவஞ்சலி நிகழ்வில் வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத் தலைவர் ரவீந்திரன் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் , நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

of

You might also like

Leave A Reply

Your email address will not be published.