பொலன்னறுவை வாவிகளில் நீர்மட்டம் அதிகரிப்பு! கவுடுள்ள வாவியில் வான் கதவு திறப்பு
பொலன்னறுவை மாவட்டத்தின் பெரும்பாலான வாவிகளில் நீர்மட்டம் கடுமையாக அதிகரித்துள்ளது.
பொலன்னறுவை மாவட்டத்தின் நிலவும் அதிக மழையுடன் கூடிய வானிலை காரணமாகவே அங்குள்ள பிரதான நீர்த்தேக்கங்கள் சிலவற்றின் நீர்ட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வான் கதவு திறப்பு
இதனால் கவுடுல்ல நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், அதன் 12 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனூடாக செக்கனுக்கு 2990 கன அடி நீர் வெளியேறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.