;
Athirady Tamil News

10,000 அகதிகள் விசாக்கள்… பிரித்தானிய அரசுக்கு வலியுறுத்தல்

0

பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், ஆட்கடத்தல்காரர்களின் பிடியில் சிக்கி, ஆங்கிலக்கால்வாயில் புலம்பெயர்வோர் பலர் உயிரிழக்கும் அவலம் தொடர்கிறது.

ஆகவே, பிரித்தானிய அரசு, அகதிகளுக்காக சிறப்பு விசாக்களை அறிமுகம் செய்யவேண்டும் என Refugee Council என்னும் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் ஆதரவு அமைப்பு பிரித்தானிய உள்துறை அலுவலகத்தை வலியுறுத்தியுள்ளது.

10,000 அகதிகள் விசாக்கள்…
ஆங்கிலக்கால்வாயில் தொடரும் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக, மக்கள் சட்டப்படி பிரித்தானியாவுக்கு வருவதற்கான 10,000 அகதிகள் விசாக்களை பிரித்தானிய உள்துறை அலுவலகம் அறிமுகம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

நேற்று Refugee Council அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஆட்கடத்தல்காரர்களின் பிடியில் சிக்கி புலம்பெயர்வோர் பலர் உயிரிழக்கும் அவலத்தை தடுத்து நிறுத்துவதற்காக அரசு இந்த சிறப்பு விசாக்களை அறிமுகம் செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், இந்த ஆண்டில் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது அந்த அமைப்பு.

2024ஆம் ஆண்டில் மட்டும், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 69 பேர் பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், ஆங்கிலக்கால்வாயில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.