ஆய்வகத்தில் தயாராகும் கொக்கோ… உலகை மாற்ற விரும்பும் சுவிஸ் ஆய்வாளர்கள்
சுவிஸ் ஆய்வாளர்கள் சிலர், சொக்லேட் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் கொக்கோவை ஆய்வகத்தில் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளார்கள்.
ஆய்வகத்தில் தயாராகும் கொக்கோ…
2026ஆம் ஆண்டில், ஆய்வகத்தில் உருவாக்கப்படும் கொக்கோவால் தயாரிக்கப்படும் சொக்லேட்டுகள் சந்தைக்கு வந்துவிடும் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.
Cell culture என்னும் முறையில் இந்த ஆய்வக கொக்கோ தயார் செய்யப்படுகிறது.
கானா, ஐவரி கோஸ்ட் மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகளில் இயற்கை முறைப்படி கொக்கோ உற்பத்தி செய்யப்படுகிறது.
கொக்கோ தயாரிப்புக்காக தொடர்ந்து விவசாய நிலத்தைப் பயன்படுத்துதல், அதிக அளவில் பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்பாடு, இயற்கையாக மண்ணில் காணப்படும் நுண்ணுயிர்கள் இழப்பு மற்றும் பருவநிலை மாற்றம் என இயற்கை கடும் சோதனைக்குட்படுத்தப்படுகிறது.
ஆய்வகத்தில் கொக்கோ தயாரிப்பதால் இந்த பிரச்சினைகளை எல்லாம் தவிர்க்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.