லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளும், லொறியும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை மேபீல்ட் பகுதியில் இன்று சனிக்கிழமை (04) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொட்டகலை பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த லொறியும் ஹட்டனிலிருந்து கொட்டகலை பகுதியை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
லொறி சாரதி கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து அப்பகுதியில் உள்ள வாகனங்கள் பழுது பார்க்கும் இடத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.