உக்ரைன் முடிவால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்… ஐரோப்பிய நாடொன்றின் பிரதமர் கலக்கம்
உக்ரைனால் ரஷ்ய எரிவாயு விநியோகம் முடக்கப்பட்ட விவகாரம் தங்கள் நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக மால்டோவா பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
மால்டோவாவில் இருந்து பிரிந்து சென்ற Transdniestria பிராந்தியத்தில் பல ஆயிரம் மக்களுக்கு எரிவாயு விநியோகம் முடக்கப்பட்டுள்ளது தங்கள் நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் டோரின் ரீசன் தெரிவித்துள்ளார்.
மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவிற்கு உக்ரைன் வழியாக ரஷ்ய எரிவாயு விநியோகமானது 2024 டிசம்பர் மாதத்துடன் நிறுத்தப்பட்டது. ரஷ்யா உடனான ஒப்பந்தத்தை உக்ரைன் புதுப்பிக்க மறுத்துள்ளது.
இந்த நிலையில் மால்டோவா தனது எரிசக்தி தேவைகளை உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதி மூலம் ஈடு செய்யும், ஆனால் பிரிந்து சென்ற Transdniestria பிராந்தியம் ரஷ்யாவுடன் நெருக்கமான உறுவு இருந்தும் கடுமையாக பாதிக்கபப்ட்டுள்ளது என்று பிரதமர் ரீசன் தெரிவித்துள்ளார்.
எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளதால் தொழிற்சாலைகள் மூடப்படும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது மால்டோவாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் மால்டோவாவில் ரஷ்ய சார்பு படைகள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதையும் உக்ரைனுக்கு எதிராக நமது பிரதேசத்தை ஆயுதமயமாக்குவதையும் நோக்கமாகக் கொண்டது என்றார்.
ஐரோப்பிய சார்பு ஜனாதிபதி
சுமார் 2.5 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட தென்கிழக்கு ஐரோப்பிய நாடான மால்டோவா, ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் மீது படையெடுத்ததில் இருந்து கவனத்தை ஈர்த்து வந்துள்ளது.
மால்டோவாவின் ஐரோப்பிய சார்பு ஜனாதிபதி Maia Sandu கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். மால்டோவாவில் ரஷ்ய மொழி அதிகமாக பேசும் மக்கள் வசிக்கும் Transdniestria பிராந்தியம் 1990களில் தனியாகப் பிரிந்து சென்றது.
இப்பகுதி உக்ரைன் ஊடாக ரஷ்ய எரிவாயுவைப் பெற்று வந்தது. பதிலுக்கு மால்டோவாவுக்கான மின்சாரத்தை Transdniestria பிராந்தியம் வழங்கி வந்தது.