மலை உச்சியில் 70 அடி உயரத்தில் இருந்து விழுந்த நபர்: மீட்புக் குழு வெளியிட்ட சோக செய்தி!
பிளென்காத்ராவில் உள்ள மலையில் 70 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மலை உச்சியில் இருந்து விழுந்த நபர்
வியாழக்கிழமை பிற்பகல் பிரித்தானியாவின் லேக் மாவட்டத்தின்(Lake District) பிளென்காத்ரா(Blencathra) மலையின் கூர்மையான உச்சியில்(Sharp Edge) 230 அடி (70 மீட்டர்) உயரத்தில் இருந்து ஒருவர் விழுந்து உயிரிழந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், கெஸ்விக்(Keswick) மலை மீட்பு குழுவின் தன்னார்வலர்கள் விரைவாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
விபத்துக்குள்ளானவரின் உடல் மீட்கப்பட்டு, விமான ஆம்புலன்ஸுக்கு கொண்டு செல்லப்பட்டது, பின்னர் அங்கிருந்து மீட்பு குழுவின் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இருந்து துரதிஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
சமூக ஊடக பதிவில், மீட்பு குழு அந்த நபரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன், சம்பவ இடத்தில் உதவிய நடைபயிற்சி சென்றவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
அந்த பதிவில், “ஆண்டின் முதல் அழைப்பில், கூர்மையான உச்சியில் இருந்து 70 மீட்டர் உயரத்தில் ஒருவர் விழுந்து உயிரிழந்ததன் மூலம் துயரமான முடிவுக்கு வந்தது.