;
Athirady Tamil News

வியட்நாம் வில்லாவில் வருங்கால கணவருடன் சடலமாக கிடந்த பிரித்தானிய பெண்! விசாரனையில் FCDO

0

வியட்நாமில் உள்ள வில்லா ஒன்றில் பிரித்தானிய பெண் மற்றும் அவரது வருங்கால கணவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய பெண் உயிரிழப்பு
வியட்நாமின் மத்திய பகுதியில் உள்ள ஹோய் ஆன்-னில்(holiday villa in Hoi An) உள்ள விடுமுறை வில்லா ஒன்றில் தங்கியிருந்த பிரித்தானிய பெண் கிரேட்டா மேரி ஒட்டெசன் (Greta Marie Otteson, 33) மற்றும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த அவரது வருங்கால கணவர் ஆர்னோ குயிண்டன் எல்ஸ் (Arno Quinton Els, 36) கடந்த டிசம்பர் 26ம் திகதி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

2024 ஜூலை மாதம் முதல் இந்த வில்லாவில் வசித்து வந்த தம்பதியர், தனித்தனி அறைகளில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் வெளிநாட்டு விவகார அலுவலகம் (FCDO), ஒட்டெசன் குடும்பத்திற்கு ஆதரவு அளித்து வருவதுடன், உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக உறுதிப்படுத்தியுள்ளது.

பொலிஸார் விசாரணை
தம்பதியரின் மரணம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர்.

சம்பவ இடத்தில் காலி மது பாட்டில்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரிகள் அவற்றை பகுப்பாய்வு செய்து வருகின்றனர்.

வெளிப்புற காயங்கள் எதுவும் அவர்களது உடலில் காணப்படாத நிலையில், அவர்களது மரணம் குறித்த விசாரணையை பொலிஸார் நடத்தி வருகின்றனர்.

ஒட்டெசன் சமூக ஊடகம் மற்றும் பிராண்ட் மார்க்கெட்டிங் துறையில் வெற்றிகரமான தொழில் முனைவோராக உள்ளார், அவரது வருங்கால கணவர் ஆர்னோ குயிண்டன் எல்ஸ் இசைக்கலைஞராகவும், ஸ்ட்ரீமராகவும் (Sṭrīmar) உள்ளார், அவர் முன்னதாக நகைச்சுவை நடிகராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.