நடிகர் நடிகையரில் உலகிலேயே அதிக பணக்காரர் இவர்தான்: அவரது சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
பணக்கார நடிகர்கள் என கருதப்படும் பிராட் பிட் மற்றும் ஜார்ஜ் க்ளூனியின் சொத்துக்களைவிட அதிகம் சொத்து வைத்துள்ளார் ஒரு நடிகை.
யார் அந்த நடிகை?
அவரது பெயர் ஜாமி கெர்ட்ஸ் (Jami Gertz). சொல்லப்போனால், அவரது ஒரு படம் கூட ஹிட் ஆனதில்லை.
ஆனால், ஜாமி கெர்ட்ஸ் அமெரிக்க நடிகையாக இருந்து தொழில் முனைவோராக மாறியவர் ஆவார்.
அவரது சொத்து மதிப்பு 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள்!
பிராட் பிட்டின் சொத்து மதிப்பு 300 மில்லியன் டொலர்கள், ஜார்ஜ் க்ளூனியின் சொத்து மதிப்பு 500 மில்லியன் டொலர்கள்.
ஆக, அவர்கள் இருவரது சொத்துக்களையும் சேர்த்தால் கூட, ஜாமியின் அருகில் கூட செல்லமுடியாது.
விடயம் என்னவென்றால், ஜாமி நடித்து இவ்வளவு சொத்து சேர்க்கவில்லை. அவர் 1989ஆம் ஆண்டு, டோனி ரெஸ்லர் (Tony Ressler) என்னும் அமெரிக்க கோடீஸ்வரரை மணந்துகொண்டார்.
அவர்கள் இருவரும் Milwaukee Brewers என்னும் அமெரிக்க பேஸ்பால் அணி மற்றும் Atlanta Hawks என்னும் கூடைப்பந்து அணிகளின் இணை உரிமையாளர்கள். அத்துடன் ஜாமி பல தொழில்களில் முதலீடும் செய்துள்ளார்.
டோனியின் சொத்து மதிப்பு, 8.5 பில்லியன் டொலர்கள் என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை!