முக்கியமான கட்சிக் கூட்டமொன்றை சந்திக்கும் கனடிய பிரதமர்!
கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ முக்கிய கட்சிக் கூட்டமொன்றை இந்த வாரம் சந்திக்க உள்ளார்.
எதிர்வரும் புதன்கிழமை லிபரல் கட்சியின் முக்கிய கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
பிரதமர் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமென கட்சிக்குள் எதிர்ப்பலைகள் எழத் தொடங்கியுள்ளன.
இவ்வாறான ஓர் பின்னணியில் முக்கியமான கட்சிக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. ஒட்டாவாவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்திற்கு நிகழ்நிலை மூலமும் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதமர் ட்ரூடோவிற்கு எதிராக கொன்சர்வேட்டிவ் கட்சி மற்றுமொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர உள்ளது.