சீனாவில் பரவும் மர்ம நோய்… பிரித்தானியாவிலும்: புதிய ஆய்வறிக்கையால் அச்சம்
மருத்துவமனைகள் ஸ்தம்பிக்கும் வகையில் சீனா முழுவதும் பரவி வரும் மர்ம நோய் தற்போது பிரித்தானியாவைத் தாக்கியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சிறார்களின் எண்ணிக்கை
காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் கோவிட் தொற்றைப் பிரதிபலிக்கும் புதிய வைரஸ் தொடர்பிலான தகவல்களால் சீனா தற்போது அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை வலி போன்றவற்றால் மருத்துவமனைகளை நாடும் சிறார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்து வருவதாகவே கூறப்படுகிறது.
hMPV என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இந்த மர்ம நோய் லேசான குளிர் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் காணப்படுவதாகவும், ஆனால் பெரும் பாதிப்புக்கு காரணமாகவும் வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.
இந்த நிலையில், பிரித்தானிய அரசாங்கம் முன்னெடுத்துள்ள சமீபத்திய ஆய்வில், hMPV அறிகுறிகள் பிரித்தானியாவிலும் காணப்படுவதாக உறுதி செய்துள்ளனர். டிசம்பர் 23 முதல் 29 வரையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் hMPV பாதிப்பு எண்ணிக்கை 4.5 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் 5 வயதுக்கு உபட்ட சிறார்களில் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 3ம் திகதி வெளியான தகவலின் அடிப்படையில் சீன நிர்வாகம் hMPV பாதிப்பு தொடர்பில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி, குறிப்பிட்ட சில மாகாணங்களில் பாதிப்பு எண்ணிக்கையை கருத்தில்கொண்டு அவசரநிலை பிரகடனம் செய்துள்ளதகாவும் வதந்திகள் பரவி வருகிறது.
உறுதி செய்யப்படவில்லை
ஆனால் சீனா நிர்வாகம் அல்லது உலக சுகாதார அமைப்பு உள்ளிட்டவை இதுவரை உத்தியோகப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை. இதனிடையே, சீனாவின் Jiangsu மாகாணத்தில் மருத்துவர் ஒருவர் தமது சமூக ஊடக பக்கத்தில், அடையாளம் காணப்படாத வைரஸ் தொடர்பில் டிசம்பர் 27ம் திகதி பொதுமக்களை எச்சரித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட நோயாளிகள் நிமோனியா மற்றும் சுவாசக் கோளாறுடன் போராடி வருவதாக அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் கொரோனா வைரஸைப் போல இந்த வைரஸ் தொற்று ஆபத்தானது என இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
மேலும் தமது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 30 நோயாளிகளில் 6 பேர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக அந்த மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.