கைது செய்ய விடாமல் தடுத்த ஜனாதிபதிக்கு மரண தண்டனையா? தென்கொரியாவில் நிலவும் பதற்றம்
தென்கொரிய முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ய முடியாத நிலையில், அவருக்கு மோசமான நிலையில் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ராணுவ சட்ட பிரகடனம்
ஜனாதிபதி யூன் சுக் யோல் (Yoon Suk Yeol) தென் கொரியாவில் ராணுவ சட்டத்தை பிரகடனம் செய்து, பின்னர் திருப்பப் பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது குற்றவியல் விசாரணையும் முன்னெடுக்கப்பட்டது.
ஆனால், விசாரணைக்கு அவர் ஒத்துழைக்காததால் கைதாணை பிறப்பிக்கப்பட்டு, அவரை கைது செய்ய பொலிஸார் இல்லாத்திற்கு சென்றனர்.
அங்கு யூனின் ஆதரவாளர்கள் மற்றும் இராணுவத்தினர் பலர் பொலிஸாரை தடுத்துள்ளனர்.
மரண தண்டனை?
இந்த நிலையில், யூன் சுக் யோல் கிளர்ச்சியின் குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
இது ஜனாதிபதியின் விதிவிலக்குக்கு உட்பட்ட சில குற்றங்களில் ஒன்றாகும். இதனால் பெரும் பதற்றம் உண்டானது.
அதாவது அவருக்கு சிறைத்தண்டனை அல்லது மோசமான நிலையில் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது