;
Athirady Tamil News

சர்ச்சைக்குள்ளான புலமைப்பரிசில் பரீட்சை : மீள ஆரம்பமாகும் மதிப்பீட்டு பணிகள்

0

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு செய்யும் பணிகள் ஆரம்பிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குள்ளான தரம் 05 மாணவர்களுக்கான 2024 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள் திருத்தும் பணிகள் இவ்வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) தெரிவித்துள்ளார்.

அதன்படி நாளை மறுதினம் (08.01.2025) புதன்கிழமை முதல் 12 ஆம் திகதி வரை மதிப்பீட்டு பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை
கடந்த ஆண்டு செப்படம்பர் மாதம் 15ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நாடாளாவிய ரீதியில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டதுடன் , 3,23,739 பரீட்சாத்திகள் இப்பரிச்சைக்கு தோற்றியிருந்தார்கள்.

எவ்வாறாயினும் பரிச்சைக்கு முன்னர், பகுதி 01 இல் காணப்பட்ட 03 வினாக்கள் வெளியானமை தெரியவந்ததையடுத்து பாரிய சர்ச்சை ஏற்பட்டது.

இதனால் பெறுபேறுகளை வெளியிட நீதி மன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் சர்ச்சைக்குள்ளான முன்று வினாக்களுக்கும் சகல பரீட்சாத்திகளுக்கும் புள்ளிகளை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.