;
Athirady Tamil News

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று!

0

இந்தியாவில் இரண்டு குழந்தைகளுக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று பரவியுள்ளதாக ஐசிஎம்ஆர் உறுதி செய்துள்ளது.

சீனாவில் கடந்த சில நாள்களாக கடுமையான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் ஏராளமான மக்கள் குவிந்து வரும் நிலையில், இதற்கு எச்.எம்.பி.வி. அல்லது மெடாநியுமோ வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

நுரையீரல் தொற்று பாதிப்புடன் மருத்துவமனைகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வருவதாகவும் சீனாவின் பல மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாதாரண சுவாச பிரச்னையை ஏற்படுத்தும் எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு இந்தியாவில் இதுவரை பதிவாக நிலையில் முன்னேற்பாடுகளை சுகாதாரத்துறை உண்ணிப்பாக கண்காணித்து வந்தது.

பெங்களூருவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று

இந்தியாவில் முதன்முறையாக, பெங்களூருவைச் சேர்ந்த 3 மாத பெண் குழந்தை மற்றும் 8 மாத ஆண் குழந்தைக்கு எச்.எம்.பி.வி. தொற்று உள்ளதாக ஐசிஎம்ஆர் இன்று (ஜன. 6) தகவல் தெரிவித்துள்ளது.

எச்.எம்.பி.வி தொற்று உறுதி செய்யப்பட்ட இரு குழந்தைகளின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு பயணம் எதுவும் மேற்கொள்ள நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சல் பாதிக்கப்பட்ட 3 மாத பெண் குழந்தை மருத்துவமனையிலிருந்து டிஸ்சாரஜ் செயய்ப்பட்ட நிலையில், 8 மாத ஆண் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது.

எச்.எம்.பி.வி அறிகுறிகள்?

சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத் திணறல் ஆகியவை முதற்கட்டமாக ஏற்படுகிறது.

உலகையை ஆட்டிப்படைத்த கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில், தற்போது எச்.எம்.பி.வி. எனும் புதுவித தொற்று பாதிப்பு சீனாவை மட்டுமல்லாது, இந்தியாவையும் அச்சுத்தி வருகின்றது.

இருப்பினும், எச்.எம்.பி.வி. தொற்றால் இந்தியாவில் பெரியளவில பாதிப்பு இல்லை. கரோனாவின்போது பயன்படுத்திய சமூக பரிசோதனை முறையை எச்எம்பிவி தொற்றுக்கும் பயன்படுத்தி முதல்கட்டமாக உறுதி செய்யப்படுகிறது.

அனைத்து சூழலையும் எதிர்கொள்ள மத்திர அரசு தயாராக இருப்பதாகவும், தேவைப்படும் பட்சத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கவும் தயாராக இருப்பதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.