வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி… விவரம் செய்திக்குள்
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலஸ் சார்க்கோசி, இன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றை எதிர்கொள்கிறார்.
2007ஆம் ஆண்டு சார்க்கோசி பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தனது கட்சியின் தேர்தல் பிரச்சாரத்துக்காக லிபியா நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியான முஅம்மர் கடாபியிடம் சுமார் 50 மில்லியன் யூரோக்கள் பெற்றதாக சார்க்கோசி மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சார்க்கோசி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துவரும் நிலையில், இந்த வழக்கில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் முடிவு செய்யுமானால், அவர் 10 ஆண்டுகள் வரை சிறை செல்ல நேரிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.