;
Athirady Tamil News

துபாயில் புர்கா அணிந்த பெண்ணை கேலி செய்த சுற்றுலா பயணிகள்: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி

0

துபாயில் புர்கா அணிந்த பெண்ணை கேலி செய்த மேற்கத்திய சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கத்திய சுற்றுலாப் பயணிகள் கைது
துபாயில் உள்ள ஒரு உணவகத்தில் புர்கா அணிந்த ஒரு பெண்ணை படம்பிடித்து கேலி செய்ததற்காக மேற்கத்திய நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வைரலான இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், கணவருடன் உணவருந்தி கொண்டிருந்த அந்தப் பெண்ணை அவர்களது அனுமதியின்றி படம்பிடிப்பதும், அவரது பாரம்பரிய உடையைப் பற்றி கேலி செய்து சிரிப்பதும் தெரிகிறது.

துபாய் பொலிஸாரின் அதிரடி
இந்நிலையில் புர்கா அணிந்த பெண்ணை கேலி செய்த சுற்றுலா பயணிகள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதை துபாய் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அந்தப் பெண்ணை அனுமதியின்றி படம்பிடித்ததும், உள்ளூர் பழக்கவழக்கங்களை மதிக்காததும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சட்டங்களை மீறிய செயல்கள் என்று பொலிஸார் இது தொடர்பாக தெரிவித்துள்ளனர்.

மத சகிப்புத்தன்மை மற்றும் கலாச்சார உணர்வு ஆகிய மதிப்புகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போற்றுகிறது என்றும், ஒருவரது மதம் அல்லது கலாச்சாரத்தை விமர்சிப்பது அல்லது கேலி செய்வது நாட்டில் குற்றமாக கருதப்படுகிறது என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சுற்றுலாப் பயணிகள் தற்போது சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.