48 நாடுகளுக்கு புதிய பயண விதிமுறையை அமுல்படுத்திய பிரித்தானிய அரசு
பிரித்தானியா செல்ல விரும்பும் 48 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு புதிய விதிமுறையை பிரித்தானிய அரசு அமுல்படுத்தியுள்ளது.
2025-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பிரித்தானியாவிற்கு (UK) செல்ல விரும்பும் 48 நாடுகளின் பயணிகளுக்கு, பயணத்திற்கு முன் Electronic Travel Authorization (ETA) என்ற புதிய அனுமதி பெறுதல் கட்டாயமாகிறது.
ETA என்ன?
ETA என்பது பிரித்தானியாவின் புதிய டிஜிட்டல் பதிவு முறை. இதன் மூலம் பயணிகள், விமானத்தில் ஏறுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும்.
இது, அமெரிக்காவின் ESTA முறைபோல, பாதுகாப்பு ஆய்வுகள் மூலம் பயண அனுமதியை வழங்குகிறது.
எந்த நாடுகளுக்கு இது பொருந்தும்?
2024-ல் Gulf Cooperation Council நாடுகள் ETA முறைமைக்கு இணைக்கப்பட்டன.
2025 முதல் அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 48 நாடுகளின் பயணிகளுக்கு இது பொருந்தும்.
ஐரோப்பிய ஒன்றிய (EU) நாடுகளின் பயணிகளுக்கு, 2025 ஏப்ரல் 2 முதல் ETA தேவைப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
ETA-க்கு விண்ணப்பிக்க £10 செலவாகும். உத்தியோகபூர்வ அரசு வலைத்தளத்தில் அல்லது செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும்போது பாஸ்போர்ட் மற்றும் புகைப்படங்களை பதிவேற்ற வேண்டும். முடிவை 3 நாட்களில் பெறலாம்.
முக்கிய தகவல்கள்
– ETA அனுமதி இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும்.
– குறைந்தது 6 மாதங்களுக்கு மட்டும் இதன் மூலம் பிரித்தானியாவில் தங்க அனுமதி உண்டு.
– குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் தனித்தனி ETA பெற வேண்டும்.
– transit பயணிகளுக்கும் ETA கட்டாயம்.
ETIAS System
இதேபோல, ஐரோப்பா செல்லும் பயணிகளுக்கு 2025 முதல் ETIAS என்ற அனுமதி முறைமை அறிமுகமாகும்.
இந்த புதிய விதிமுறைகள், பயண அனுமதியில் பாதுகாப்பை அதிகரிக்க உதவுகின்றன.