முன்மொழியப்பட்ட மின்சார கட்டணம் தொடா்பான ஆலோசனைச் செயலமர்வு
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் லலித் சந்திரமால் தலைமையில் நேற்றைய தினம் (06.01.2025) யாழ் மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மின்சார கட்டணம் தொடர்பான ஆலோசனைகளை பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களிடம் கேட்டறியும் நோக்கினை அடிப்படையாகக் கொண்டு இச் செயலமர்வு நடைபெற்றது.
இச்செயலமர்வு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் டமித் குமாரசிங்க, பிரதிப்பணிப்பாளர் கலாநிதி நிலாந்து சபுமனஜி, உறுப்பினர்களான பஜால் ஹென்னாயஹே மற்றும் கலாநிதி (திருமதி) சதுரி பொ்னான்டோ , செயலாளர் நடீயா வரப்பிட்டிய, இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உட்பட துறைசாா் அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.