கிளிநொச்சியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற கஞ்சா!
கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு நேற்று (06) மோட்டர் சைக்கிளில் கஞ்சா கடத்தியதாக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, ஓமந்தைப் பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது
இதன்போது கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்த மோட்டர் சைக்கிள் ஒன்றில் இருந்து 700 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சம்ப வம் தொடர்பில் 36 வயதுடைய பெண் ஒருவரும், அவரது சகோதரர் எனக் கூறப்படும் 30 வயதுடைய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து இரண்டு இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின் கைதான இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.