;
Athirady Tamil News

ஒலியை விட 12 மடங்கு வேகமாக பாயும் ஏவுகணை: வட கொரியாவின் சோதனை வெற்றி!

0

ஒலியை விட 12 மடங்கு அதிக வேகமாகப் பாயும் சுப்பர்சோனிக் ஏவுகணை சோதனையில் வடகொரியா வெற்றிபெற்றுள்ளது.

வடகொரியா நேற்று முன்தினம் (ஜன. 6) ஏவுகணை சோதனை மேற்கொண்டது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில், இந்த ஏவுகணை கிட்டத்தட்ட 1,500 கி.மீ தூரத்திற்கு ஒலியை விட 12 மடங்கு அதிக வேகம் சென்று தாக்கும் என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

எந்த நாட்டினராலும் பதில் தாக்குதல் நடத்த முடியாத அளவுக்கு ஆயுத கட்டமைப்பை மேம்படுத்துவதாகக் கூறிய கிம், அணு ஆயுத பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இந்த ஏவுகணையை உருவாக்கியதாகத் தெரிவித்தார்.

”பசிபிக் பிராந்தியத்தில் நமது நாட்டை அச்சுறுத்த நினைக்கும் எந்த வகையான எதிரிகளையும் சமாளிக்கு விதமாக இந்த ஹைபர்சோனிக் ஏவுகணை தயாராகியுள்ளது” என கிம் பேசியுள்ளார்.

பாலிஸ்டிக் வகை ஏவுகணையான இது அதிக உச்சமாக 99.8 கி.மீ. உயரத்திற்குச் சென்று, பின்னர் 42.5 கி.மி. உயரத்திற்கு வந்து, 1,500 கி.மீ தூரத்தை வெற்றிகரமாகக் கடந்து, கடலில் அமைக்கப்பட்டிருந்த அதன் இலக்கை சரியாகத் தாக்கியதாக வடகொரிய செய்தி நிறுவனம் தெரிவித்தது.

வட கொரியா கடந்த இரண்டு மாதங்களில் முதல் முறையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. வருகிற ஜனவரி 20 அன்று அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க இருப்பதைத் தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்றிருப்பது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த ஏவுகணை கொரிய தீபகற்பத்துக்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடல்பகுதியில் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அது 1,100 கி.மீ. தொலைவு மட்டுமே சென்றதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும், வடகொரியா இதை மிகைப்படுத்துகிறது. அவர்கள் அமெரிக்காவுக்கு எதிராகத் தனது பலத்தை காட்ட முயன்றிருக்கலாம் என்றும் தென் கொரிய அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.