;
Athirady Tamil News

அமெரிக்காவில் இந்திய மாணவி உயிரிழந்த வழக்கு: மற்றொரு காவலர் பணிநீக்கம்

0

கடந்த ஆண்டு இந்திய மாணவி அமெரிக்காவில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய மாணவி
வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் ஜானவி கண்டூலா (23) என்ற மாணவி படித்து வந்தார்.

இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த ஜானவி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சாலையை கடக்கும்போது, பொலிஸ் ரோந்து வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து, விபத்திற்கு பின் சியாட்டில் பொலிஸ் சங்க தலைவரை தொலைபேசியில் அழைத்த காரில் இருந்த அதிகாரி டேனியல் ஆடரெர், விபத்து குறித்து அவரிடம் கூறியுள்ளார்.

அப்போது மாணவி குறித்தும், விபத்து குறித்தும் கேலியாக பேசி சிரித்துள்ளார். அவர்களின் உரையாடல் டேனியல் உடலில் இருந்த கமெராவில் பதிவானது.

மேலும் அந்த ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என கண்டனங்கள் எழுந்தன. பின்னர் கேலியாக பேசிய டேனியல் ஆடரெர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

பணிநீக்கம்
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக காரை இயக்கிய கெவின் டேவ் என்ற காவலரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சியாட்டில் நகர இடைக்கால காவல்துறைத் தலைவர் ஸ்யூ ராஹர் பணிநீக்க உத்தரவிட்டார். சம்பவம் நடந்தபோது ஒரு அவசர உதவி அழைப்பை விசாரிப்பதற்காக, காவல்துறை வாகனத்தை கெவின் டேவ் சுமார் 119 கிலோமீற்றர் வேகத்தில் ஓட்டியுள்ளார் என தெரிய வந்தது.

இதுகுறித்து சியாட்டில் காவல்துறை தரப்பில் கூறுகையில், கெவின் டேவ் சில விதிகளை மீறியுள்ளார்.

அவசர உதவிக்காக சென்ற அவரது செயலின் நோக்கம் நேர்மையானதாக இருந்தாலும், இந்த விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு ஈடு செய்ய முடியாதது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.