சத்தீஸ்கரில் மரணமடைந்த 8 வீரர்களில் 5 பேர் முன்னாள் மாவோயிஸ்டுகள்!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மரணமடைந்த பாதுகாப்புப்படை வீரர்கள் 8 பேரில் 5 பேர் மாவோயிஸ்ட்டாக இருந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் ஜன. 6 ஆம் தேதி பாதுகாப்புப் படை வீரர்கள் வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது மாவோயிஸ்டுகள் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். ஓட்டுநரும் இதில் பலியாகியுள்ளார்.
டிஆர்ஜி மற்றும் பஸ்தார் படையைச் சேர்ந்த தலா 4 பேர் மரணம் அடைந்த நிலையில் இதில் 5 பேர் ஏற்கெனவே மாவோயிஸ்ட்டாக இருந்தவர்கள்.
அதனைக் கைவிட்டு பாதுகாப்புப் படைக்கு உதவும் விதமாக இணைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பஸ்தார் பகுதியில் 792 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர்.