சிரியா தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தை கட்டாயப்படுத்தும் ஜேர்மனி
சிரியாவின் புதிய ஆட்சியாளர்களுடன் இணக்கமான உறவை முன்னெடுக்க மேற்கத்திய நாடுகள் முயற்சிக்கும் நிலையில் சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை தளர்த்துமாறு ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம்
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் படையால் வெளியேற்றப்பட்ட பஷர் அல்-அசாத்தின் ஆட்சியின் மீது 27 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியம் பல அளவிலான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது சிரியா மீதான எரிசக்தி மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகள் மீதான தடைகளை முடிவுக்குக் கொண்டுவர ஜேர்மனி முயற்சிகள் முன்னெடுத்து வருகிறது.
அத்துடன் சிரியாவின் புதிய அரசாங்க சேவைகளுடன் நிதி பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்கு அழுத்தம் கொடுப்பதுடன், தனியார் முதலீடுகளை மாற்றுவதற்கான கட்டுப்பாடுகளை எளிதாக்கவும் அழுத்தம் அளித்து வருகிறது.
அல்-அசாத் வெளியேறியதன் பின்னர் ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் அன்னலெனா பேர்பாக் மற்றும் பிரான்ஸ் வெளிவிவராக அமைச்சரும் டமாஸ்கஸுக்கு விஜயம் செய்ததன் பின்னரே ஜேர்மனி தனது திட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறது.
நீக்குவதில் தயக்கம்
ஜேர்மனி முன்வைத்துள்ள திட்டங்களை ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்கள் ஜனவரி 27 அன்று பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் கூட்டத்தில் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக அடிப்படை சேவைகளுக்கான அணுகலை எளிதாக்க அடுத்த ஆறு மாதங்களுக்கு சிரியாவில் சில நடவடிக்கைகளுக்கு கூடுதலாக பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக அமெரிக்கா திங்களன்று கூறியதை அடுத்தே ஜேர்மனியும் அழுத்தமளிக்கத் தொடங்கியது.
மட்டுமின்றி, சிரியாவின் தற்போதைய நிர்வாகமும் தடைகளை நீக்கும் பொருட்டு, தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. ஆனால் பல சர்வதேச நாடுகள் தடைகளை நீக்குவதில் தயக்கம் காட்டி வருவதுடன், புதிய அரசாங்கத்தின் செயல்பாடுகளை பொறுத்தே நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளது.