64 ரஷ்ய ட்ரோன்களில் 41 சுட்டு வீழ்த்திய உக்ரைன்: புதிய உதவிக்கு தயாரான அமெரிக்கா
உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ட்ரோன்களை உக்ரைனிய வான் பாதுகாப்பு படைகள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளன.
சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்
உக்ரைனுக்குள் தாக்குதல் நடத்த நுழைந்த 64 ரஷ்ய ட்ரோன்களில் 41 ட்ரோன்களை உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியுள்ளது.
மீதமுள்ள 22 ட்ரோன்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The air defense forces shot down 41 Russian drones out of 64, and another 22 UAVs were lost
The air defense system operated in Poltava, Sumy, Kharkiv, Cherkasy, Chernihiv, Zhytomyr, Dnipro, Mykolaiv, and Kirovohrad regions pic.twitter.com/zFMtPwjUF4
— NEXTA (@nexta_tv) January 8, 2025
ரஷ்ய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் செயலில், பொல்டாவா, சுமி, கார்கிவ், செர்காசி, செர்னிஹிவ், சைட்டோமிர், டினிப்ரோ, மைகோலைவ் மற்றும் கிரோவோஹ்ராட் ஆகிய பகுதியில் நிலை நிறுத்தப்பட்டு இருந்த உக்ரைனிய வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய உதவி
உக்ரைனுக்கு ஜனவரி 9ம் திகதி புதிய உதவி தொகுப்பை வெள்ளை மாளிகை வெளியிட இருப்பதாக அமெரிக்காவின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளை குறிப்பிட்டு அசோசியேட்டட் பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இதில் உக்ரைனுக்காக அமெரிக்க காங்கிரஸ் ஒதுக்கிய $4 பில்லியன் என்ற முழு தொகையையும் இடம்பெறாது என எதிர்பார்க்கப்படுகிறது.