;
Athirady Tamil News

இத்தாலிய மலைத்தொடரில் 2 பிரித்தானியர்கள் மாயம்: தேடுதல் வேட்டையில் சிக்கல்

0

இத்தாலியின் டோலமைட்ஸ் மலைத் தொடரில் 2 பிரித்தானியர்கள் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போன பிரித்தானியர்கள்
லண்டனைச் சேர்ந்த 36 வயதான அஜீஸ் ஜிரியாத்(Aziz Ziriat) மற்றும் 35 வயதான சாமுவேல் ஹாரிஸ்(Samuel Harris) ஆகிய இரு பிரித்தானிய குடிமக்கள், வடக்கு இத்தாலியில் உள்ள டோலமைட்ஸ்(Dolomites) மலைத்தொடரில் கடந்த வாரம் முதல் காணாமல் போயுள்ளனர்.

ஜனவரி 1 ஆம் திகதி பிற்பகல் அவர்கள் அந்தப் பகுதியில் ட்ரெக்கிங் சென்று கொண்டிருந்த போது கடைசியாக அவர்களுடன் தொடர்பு கொள்ளப்பட்டது.

ஜனவரி 7 ஆம் திகதி அவர்கள் இங்கிலாந்து திரும்பும் விமானத்துக்கு தாமதமானதால், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது.

இருப்பினும், பனிமூட்டம் மற்றும் மோசமான காலநிலை போன்ற கடுமையான வானிலை நிலைமைகள் மீட்பு முயற்சிகளுக்கு தடையாக உள்ளன.

கடைசி தொடர்பு
கடைசியாக அவர்களுடன் தொடர்பு கொண்ட நாளில் அவர்கள் கேரே ஆல்டோ(Carè Alto) மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள வால் சான் வாலண்டினோவில்(Val San Valentino) உள்ள மால்கா டோசன்(Malga Dosson) தங்கும் இடத்திற்கு அருகில் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

வான்வழி ஆய்வு மேற்கொள்ள அனுப்பப்பட்ட ஹெலிகாப்டர் கடுமையான வானிலை காரணமாக திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தீயணைப்பு துறையினரால் இயக்கப்படும் தரைவழி தேடுதல் குழுக்கள் மற்றும் ட்ரோன்களும் பாதுகாப்பு காரணங்கள் மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக தங்கள் நடவடிக்கைகளை தொடர முடியவில்லை.

தேடுதல் இரவு நேரத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது மற்றும் அதிகாலை மீண்டும் தேடல் வேட்டை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.