நீரிழிவு நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடலாமா? தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்
நீரிழிவு நோயாளிகள் பனங்கிழங்கை சாப்பிடலாமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோய்
மோசமான வாழ்க்கை முறையினால் நீரிழிவு நோய் ஏற்படும். உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் நிலையில், இதனை கட்டுக்குள் வைப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஏனெனில், உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அதனால் இதயம், மூளை, சிறுநீரகம், கல்லீரல், கண் போன்ற உடலில் இருக்கும் பிற உறுப்புகள் பாதிக்கப்படும். எனவே அதை கட்டுக்குள் வைப்பது மிகவும் முக்கியம்.
சர்க்கரை நோயாளிகள் தங்களது உணவின் மூலம் ரத்த சர்க்கரை அளவை சுலபமாக கட்டுப்படுத்தலாம். உயர் ரத்த சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரோக்கியமான உணவை பின்பற்ற வேண்டும் என்று நிபுணர்களால் அறிவுறுத்தப்படுகின்றது.
பனங்கிழங்கு சாப்பிடலாமா?
பனங்கிழங்கின் கிளைசெமிக் இன்டெக்ஸ் மற்றும் கிளைசெமிக் லோடு குறைந்துள்ளதால், சர்க்கரை நோயாளிகள் இதனை தாராளமாக சாப்பிடலாம்.
பனங்கிழங்கில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி, உணவு எடுத்தவுடன் குளுக்கோஸ் அளவு அதிகரிக்காமல் தடுக்க உதவுகிறது.
இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் இன்சுலின் உற்பத்தியை தூண்டி, ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகின்றது.
பனங்கிழங்கில் உள்ள வைட்டமின் சி, இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி சர்க்கரையின் அளவை குறைக்கவும் செய்கின்றது.
பனங்கிழங்கில் உள்ள இரும்புச்சத்து ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ரத்த சோகையைத் தடுக்கின்றது. மேலும் இதில் உள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தத்தை சீர்படுத்தி, இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.