யாழில். மணல் அகழ்வதற்கான போலி அனுமதி பத்திரத்துடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் மணல் ஏற்றுவதற்காக போலி அனுமதி பத்திரத்தை தயாரித்த குற்றச்சாட்டில் கைதானவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மணல் அகழ்வதற்கான அனுமதி பத்திரத்தை போலியாக தயாரித்து , அதன் மூலம் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த நபர் கைது செய்யப்பட்டார்
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து போலி அனுமதி பத்திரத்தையும் பொலிஸார் மீட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நேற்றைய தினம் புதன்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை சந்தேகநபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.