கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியர் சான்றிதழ் வழங்கும் வைபவம்
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கற்று வெளியேறி பரீட்சைத் திணைக்களம் நடத்தும் இறுதித் தேர்வில் சித்தியடைந்த 150 ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் 11. 01. 2025 சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் நடைபெறவுள்ளது
கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைப்பார்.