;
Athirady Tamil News

அமெரிக்காவில் காட்டுத்தீக்கு இரையான 6.5 மில்லியன் மதிப்பிலான மாளிகை! வீடுகளை இழந்த பிரபலங்கள் சோகப்பதிவு

0

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் ஹாலிவுட் பிரபலங்கள் ஆடம் பிராடி-லைட்டன் மீஸ்டரின் ஆடம்பர வீடு எரிந்ததாக தெரிய வந்துள்ளது.

பசிபிக் பாலிசேட்ஸ் காட்டுத்தீ
அமெரிக்காவின் பசிபிக் பாலிசேட்ஸ் காட்டுத்தீயானது, லாஸ் ஏஞ்சல்ஸ் சுற்றுப்புறத்தில் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தி வருகிறது. இதன் கட்டுக்கடங்காத பரவலால் 30,000 பேர் வெளியேற வழிவகுத்தது.

இந்த நிலையில், ஹாலிவுட்டின் பிரபல தம்பதிகளான ஆடம் பிராடி (Adam Brody) மற்றும் லைட்டன் மீஸ்டர் (Leighton Meester) ஆகியோரின் 6.5 மில்லியன் மதிப்பிலான ஆடம்பர மாளிகை தீயில் எரிந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தம்பதியரின் குடும்ப வீடு தீயில் எரிந்து முற்றிலும் அழிந்துள்ளது என்பதை புகைப்படங்கள் வீடியோக்கள் காட்டுகின்றன.

பாரிஸ் ஹில்டன் வேதனை
அதேபோல் பிரபலங்களான பாரிஸ் ஹில்டன், அன்னா பாரிஸ் ஆகியோரும் தங்களது வீடுகளை இழந்துள்ளனர்.

பாரிஸ் ஹில்டன் வெளியிட்ட தனது பதிவில், “தொலைக்காட்சியில் எங்கள் Malibu வீடு எரிந்ததைப் பார்த்து எனது இதயம் நொறுங்கியது. என் பிள்ளைகள் விளையாடிய இடம் அது மற்றும் நாங்கள் பல மதிப்பில்லா நினைவுகளை அங்கு உருவாக்கி இருந்தோம். எனது குடும்பம் அதிர்ஷ்டவசமாக தப்பியதால் நிம்மதியடைந்துள்ளேன். ஆனாலும் அந்த வீட்டில் நிறைய இழந்துவிட்டதால் இதயம் கனக்கிறது” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.