;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட அரிய வகைப் புலி!

0

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக் கல்லாற்றில் அரிய வகைப் புலி ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

Prionailurus viverrinus என்கின்ற மீன்பிடிப் பூனை (Fishing cat) இனத்தை சேர்ந்ததாக நம்பப்படும் அரிய வகைப் புலியே இன்றையதினம் (10-01-2024) இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

THE FISHING CAT என அழைக்கப்படும் மீன்பிடி பூனை என அழைக்கப்படுவதுடன் மக்கள் வாழும் பகுதியில் இவ்வாறான அரிய வகை புலிகள் காடுகளில் இருந்து உள் நுழைந்து மீன் உட்பட கிராம வாசிகளின் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில் இவ்வாறு சிக்கி உயிரிழந்துள்ளது.

மேலும், சுமார் 3 அடி நீளமான புலியின் உடலம் விபத்து சம்பவத்தினால் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதா அல்லது யாராவது தாக்கி கொல்லப்பட்டதா என்ற விசாரணைகளை வன வனஜீவராசி திணைக்களமும் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.