திருக்கோவில் விபத்தில் சட்டத்தரணி உயிரிழப்பு
திருக்கோவில் பிரதேச தம்பட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த தம்பிலுவிலை சேர்ந்த சட்டத்தரணி லயன் எஸ்.சசிராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (05) மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போது தம்பட்டை பிரதேசத்தில் கென்றர் வாகனமொன்று மோதி படுகாயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் .
சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று (09) உயிரிழந்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் தடவையியல் மருத்து துறையில் டிப்ளோமா பட்டம் பெற்ற எஸ்.சசிராஜ் ,அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர் என்பதுடன் திடீர் மரண விசாரணை அதிகாரியாகவும் செயற்பட்டிருந்தவர் என கூறப்படுகின்றது.