;
Athirady Tamil News

இராணுவம் இறங்கும்… தேசிய அவசரநிலை: டொனால்டு ட்ரம்பின் அதிரவைக்கும் திட்டம்

0

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பொறுப்புக்கு வரவிருக்கும் டொனால்டு ட்ரம்ப் மொத்தம் 100 சிறப்பு நிர்வாக ஆணைகளை அமுலுக்கு கொண்டுவர இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளார்.

நிர்வாக ஆணை
இதில் டொனால்டு ட்ரம்பின் உடனடி முன்னுரிமைகள் என்பது எல்லைப் பாதுகாப்பு மற்றும் அமெரிக்க எரிசக்தி உற்பத்தியை மீண்டும் கட்டியெழுப்புதல் என்றே கூறப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தெரிவாகியுள்ள டொனால்டு ட்ரம்ப், பொறுப்புக்கு வரும் முதல் நாளில் குறைந்தது 25 நிர்வாக ஆணைகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், புலம்பெயர் விவகாரம் தொடர்பில் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யவும் முடிவு செய்துள்ளதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, சட்டவிரோத புலம்பெயர் மக்களில் குற்றப்பின்னணி கொண்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முதலில் தொடங்கப்படும் என்றும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

சட்டவிரோத புலம்பெயர் மக்களை நாடுகடத்தும் திட்டத்தில் அமெரிக்க இராணுவம் களமிறக்கப்படும், ஆனால் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பயணத் தடை விதிக்க
இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தது 100,000 படுக்கைகளை ஒதுக்குவதற்காக தடுப்பு மையங்களுக்கு நிதியை அங்கீகரிக்க காங்கிரஸின் உதவியை நாட இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, பயங்கரவாதம் தலைதூக்கியுள்ள நாடுகளுக்கும் அந்த நாட்டு மக்களுக்கும் பயணத் தடை விதிக்கவும் ட்ரம்ப் தயாராகி வருகிறார். அமெரிக்காவில் பிறப்பதால் கட்டாயக் குடியுரிமை என்ற திட்டத்தையும் ட்ரம்ப் முடிவுக்குக் கொண்டுவர இருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.