பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸிற்கு பயணம்: மேக்ரான் கூறிய விடயம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்வது குறித்து மேக்ரான் பேசியுள்ளார்.
மோடி பயணம்
அரசுமுறைப் பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸிற்கு பிப்ரவரி மாதம் செல்ல உள்ளார்.
அங்கு நடைபெற உள்ள AI உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அவர், ஜனாதிபதி இமானுவெல் மேக்ரானை சந்தித்து பேச உள்ளார்.
AI உச்சி மாநாடு
மோடியின் வருகை குறித்து பிரெஞ்சு தூதர்கள் மாநாட்டில் பேசிய மேக்ரான், “பிப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் பிரான்ஸ் AI உச்சி மாநாட்டை நடத்தும். இது செயல்பாட்டிற்கான உச்சி மாநாடாகும். இது செயற்கை நுண்ணறிவு குறித்த விவாதத்தை நடத்த எங்களுக்கு உதவும்.
பிரதமர் மோடி நமது நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட உடனேயே அங்கு இருப்பார். இது அனைத்து சக்திகளுடனும், IEA, அமெரிக்கா, சீனா மற்றும் வளைகுடா நாடுகளுடனும் ஒரு உரையாடலை நடத்த எங்களுக்கு உதவும்” என்றார்.