;
Athirady Tamil News

150 பில்லியன் டொலர் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயால் இழப்பு! அமெரிக்க வரலாற்றில் விலையுயர்ந்த பேரழிவு

0

அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீ வரலாற்றில் பாரிய அளவில் நட்டத்தை ஏற்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரிய காட்டுத்தீ

கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீ அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 4 கோடி பேர் வசிக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருந்து சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதுவரை காட்டுத்தீக்கு 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. பிரபலங்கள் சிலரின் ஆடம்பர வீடுகள், உடைமைகளும் தீயிற்கு இரையாகின.

150 பில்லியன் டொலர்கள்

இந்த நிலையில், அமெரிக்காவின் பிரபல தனியார் வானிலை நிறுவனம் தீயால் ஏற்பட்ட சேதம் குறித்து மதிப்பிட்டுள்ளது.

அதன்படி சுமார் 150 பில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்பில் 1.29 லட்சம் கோடி) அளவிற்கு இழப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது.

இதன்மூலம் அமெரிக்க வரலாற்றிலேயே பாரிய அளவில் நட்டத்தை ஏற்படுத்திய விபத்தாக இது இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

தனியார் இடர் மேலாண்மை சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டயான் டெலானி கூறுகையில், “இதுபோன்ற ஒரு பெரிய பேரழிவு நிகழ்வின்போது காப்பீடு செய்யப்படாத அல்லது காப்பீடு செய்யப்படாதவர்களின் மிகப்பெரிய எண்ணிக்கையாக இது இருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.