;
Athirady Tamil News

சீனாவில் பரவும் மர்ம வியாதி… மலேசியா, இந்தியாவில் அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கை

0

நாடு முழுவதும் பரவி வரும் மர்ம வைரஸால் சீனா கடுமையாக திணறி வருகிறது. வெளிவரும் தகவல்களில், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவே கூறப்படுகிறது.

சீனாவில் வேகமாக வியாபித்துவரும் HMPV தொற்று தற்போது சுகாதார நிபுணர்களை நடவடிக்கை எடுக்கத் தூண்டியுள்ளது. மட்டுமின்றி, தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது சீனாவின் அண்டை நாடுகளான இந்தியாவும் மலேசியாவும் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​இந்திய மாகாணமான கர்நாடகா துரித நடவடிக்கை எடுத்துள்ளது.

HMPV அறிகுறிகள் தென்பட்டால், பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்துகிறது. மேலும் மூவர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், கூட்ட நெரிசலான பகுதிகளில் முகக்வசங்களை அணியவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது கோவிட் வைரஸ் போன்று அபாயகரமானது அல்ல என்று நிபுணர்கள் கூறினாலும், பிரித்தானியாவில் இந்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் NHS இன்னும் அதிகமாக திணறும் நிலை ஏற்படும் என்று சுகாதார வல்லுநர்கள் கவலைப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் முதன்முதலில் 2001 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் அடையாளம் காணப்பட்டது. இது உலகளவில் ஒரு பொதுவான நோயாகும். சளி, இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அடிப்படை அறிகுறிகளுடன் காணப்படலாம்.

ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் நோயெதிர்ப்பு நிலையைப் பொறுத்து, தீவிரமடையலாம் என்றும், மரணம் ஏற்படவும் காரணமாகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களை ஒப்பிடுகையில், பாதிப்பு எண்ணிக்கை 4.15 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவே கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.