மூச்சுவிட தத்தளித்த கேரி ஜான்சன்… காய்ச்சல் மற்றும் நிமோனியா பாதிப்பால் அவதி
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் மனைவி கேரி ஜான்சன் காய்ச்சல் மற்றும் நிமோனியா பாதிப்பால் அவதிப்பட்டுள்ளதை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
முழுமையாக குணமடையவில்லை
கடந்த 3 வாரங்கள் குளிர்கால வைரஸ் பாதிப்பால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கேரி ஜான்சன் குறிப்பிட்டுள்ளார். சிகிச்சை முடித்து வீட்டுக்கு திரும்பியுள்ளதாக குறிப்பிட்ட அவர், மூச்சுவிட சிரமப்பட்டதாகவும்,
காய்ச்சல் மற்றும் நிமோனியா இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்திருந்ததையும், ஒருவார காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை குறிப்பிட்டிருந்த அவர், முழுமையாக இதுவரை குணமடையவில்லை என்றும், இன்னும் சில வாரங்களாகலாம் மீண்டு வருவதற்கு என்றும் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 18 நாட்களாக மார்பு தொற்று காரணமாக அவதிப்பட்டதாகவும், அதன் பின்னர் புத்தாண்டின் தொடக்க சில நாட்கள் John Radcliffe மருத்துவமனையில் செலவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சராசரியாக 5,408 பேர்கள்
2020ல் அப்போது பிரதமராக இருந்த போரிஸ் ஜோன்சனும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நிலைமை மிக மோசமாக இருப்பதாகவும், அவரது மரணம் குறித்து அறிவிக்க தயாரானதாகவும் மருத்துவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.
ஜனவரி 5 ஆம் திகதி வரையான முதல் வாரத்தில், ஒவ்வொரு நாளும் சராசரியாக 5,408 பேர்கள் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர், அவர்களில் 256 பேர்கள் கோவிட், நோரோவைரஸ் பாதிப்புடன் தீவிர சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.