இணுவிலில் தொடர் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இணுவில் அம்மன் கோவில் , உப தபால் அலுவலகம் , மருந்தகம் , அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீடு என சில தினங்களில் தொடர் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் , CCTV காணொளிகளின் மூலம் சந்தேகநபரை அடையாளம் கண்டு கொண்ட பொலிஸார் நேற்றைய தினம் சனிக்கிழமை சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைங்களை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.