பேரழிவுக்கு ஆளான லாஸ் ஏஞ்சல்ஸ்! விரைந்தது கனேடிய வான்வழி தீயணைப்பு விமானம் – ஜஸ்டின் ட்ரூடோ
தெற்கு கலிபோர்னியா காட்டுத்தீயைக் கடந்து கனேடிய வான்வழி தீயணைப்பு விமானம் உதவுதற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
மோசமான நிலையை அடையும் தெற்கு கலிபோர்னியா
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையை அடைந்துள்ளது. தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
தெற்கு கலிபோர்னியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பேரழிவு தரும் காட்டுத்தீ குறித்து கனடா அரசாங்கமும், அனைத்து கனேடியர்களும் தங்கள் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுகின்றனர்.
Canadian aerial firefighting aircraft readying for another pass over the Southern California wildfires.
Always here to help our American friends. 🇨🇦🇺🇸pic.twitter.com/JwpNQIiEi8
— Justin Trudeau (@JustinTrudeau) January 12, 2025
கனடா தரப்பில் வெளியான அறிக்கையில், கடந்த ஆண்டு எங்கள் சொந்த சவாலான காட்டுத்தீ பருவத்தின்போது அமெரிக்கா கனடாவிற்கு வழங்கிய ஆதரவு மற்றும் ஒற்றுமைக்கு கனேடியர்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.
இந்த தேவைப்படும் நேரத்தில் அந்த ஆதரவை ஈடுசெய்ய கனடா குழு தயாராக உள்ளது. கனடா மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுடன் இணைந்து தனது ஆதரவைத் தயார் செய்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரூடோ பதிவு
மேலும், ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள பதிவில், “தெற்கு கலிபோர்னியா காட்டுத்தீயைக் கடந்து மற்றொரு பயணத்திற்கு கனடிய வான்வழி தீயணைப்பு தயாராகியுள்ளது. எங்கள் அமெரிக்க நண்பர்களுக்கு உதவ எப்போதும் இங்கே இருப்போம்” என குறிப்பிட்டு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.