ரஷ்யாவின் 29 நிறுவனங்கள், 3 வங்கிகள் மீது ஜப்பான் பொருளாதார தடை!
உக்ரைனுக்கு தனது ஆதரவை காட்டும் வகையில் ரஷ்யாவைச் சேர்ந்த 11 தனிநபர்கள், 29 நிறுவனங்கள் மற்றும் 3 வங்கிகள் மீது ஜப்பான் பொருளாதார தடை விதித்துள்ளது.
இதேவேளை, தொழில்நுட்பம் மற்றும் எந்திர உற்பத்தி உள்ளிட்ட ரஷ்ய ராணுவம் சார்ந்த 22 தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி தடை உள்ள 335 பொருட்களின் பட்டியலுக்கும் ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.