பேஸ்புக் களியாட்டத்தில் 10 பேர் கைது
பொலன்னறுவை,பெந்திவெவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் களியாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ததாக கூறப்படும் 10 சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (12) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரலகங்வில பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடமிருந்து 550 கிராம் கொக்கேன் போதைப்பொருள் மற்றும் 45 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.