பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்திய மக்களின் பங்களிப்புடன் வடமராட்சி பகுதியை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு
பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்திய மக்களின் பங்களிப்புடன் வடமராட்சி பகுதியை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
யாழ் இந்திய துணைதூதுவராலயத்தினால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை செல்வச்சந்நிதி ஆலய சூழலில் உள்ள மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
யாழ் இந்திய துணை தூதுவர் சாய் முரளி உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டு பொங்கல் பொதிகளை வழங்கி வைத்தனர்.